News March 28, 2024
மதுரை: பட்டப்பகலில் ரைஸ் மில் அதிபர் கொடூர கொலை

மதுரை சிந்தாமணி சாலை ராஜம்மா நகரில் விஜயலட்சுமி அரிசி ஆலையை சௌந்தர குமார் (50) என்பவர் நடத்தி வருகிறார். இன்று அரிசி ஆலையில் இருந்த போது மர்ம கும்பல் சௌந்தர குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆலைக்கு அருகே கருவேலமரம் வெட்டுவதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 20, 2025
மதுரையில் 613 உணவகங்களுக்கு நோட்டீஸ்

மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக 613 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக RTI-ல் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் 51 உணவகங்கள் சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்ததாக நீதிமன்றம் மூலம் சுமார் 108 உணவக உரிமையாளர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
News April 20, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (20.04.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 20, 2025
மதுரை மக்களே எச்சரிக்கை

மதுரையில் நாளை ஏப்.21 முதல் ஏப்.26ஆம் தேதி வரை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெயில் கொளுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறுவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குளிர்ச்சியான பானம் மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.