News November 18, 2024
மதுரை: திருமண மண்டபத்தில் செயல்படும் அரசு பள்ளி
மதுரை பழங்காநத்தம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் 5ம் வகுப்பு பள்ளி மாணவன் அகிலன் முதல் தளத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக தற்போது பள்ளி மூடப்பட்டு தற்போது அருகில் உள்ள திருமண மண்டபத்தில் செயல்படுகிறது
Similar News
News November 19, 2024
மதுரையில் முதல் முறையாக இதய வடிவிலான ரெட் சிக்னல்
மதுரை, மாட்டுத்தாவணி மேலூர் மெயின் சாலையில் இதய வடிவிலான ரெட் சிக்னல் வாகன ஒட்டிகளை கவர்ந்து வருகிறது. சென்னையில் இதய சிக்னல் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. அதேபோல் மதுரையில் உத்தங்குடி ரிங் ரோடு சந்திப்பு சர்வேயர் காலனி 120 அடி ரோடு மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் சந்திப்பு சிக்னல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை நேற்று(நவ.18) போக்குவரத்து துணை கமிஷனர் அனிதா உதவி கமிஷனர் இனமாறன் ஆய்வு செய்தனர்.
News November 19, 2024
மதுரை சிறுவனுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்க ஆட்சியர் உத்தரவு
மதுரை மாநகராட்சி பள்ளியின் மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த மாணவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று(நவ.18) கலெக்டர் சங்கீதா சிறுவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அவர், பின்னர் சிறுவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டீன் அருள் சுந்தரேஷ்குமாரிடம் கேட்டறிந்தார். மேலும் சிறுவனுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்
News November 19, 2024
மதுரை சிறைக்கு 89 ஏக்கரில் செம்பூரில் இடம் தேர்வு
மதுரை மத்திய சிறை 1875ஆம் ஆண்டு, 31 ஏக்கரில் அமைக்கப்பட்டது. இட நெருக்கடியான இச்சிறையில் தற்போது 1800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை புறநகர் பகுதியில் புதிதாக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மேலுார் அருகே செம்பூரில் 89 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.