News April 7, 2025

மதுரை: தகாத உறவினால் தூக்கிட்டு தற்கொலை

image

மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், சீகுபட்டியை சேர்ந்த பால்பாண்டி மனைவி மயிலம்மாள்(43) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. தன்னை விட 10வயது மூத்த பெண்ணிடம் இவர் தொடர்பில் இருந்ததை உறவினர்கள் கண்டித்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த இருவரும், மயிலம்மாள் வீட்டு அருகே இருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஊமச்சிகுளம் போலீசார் விசாரணை.

Similar News

News April 8, 2025

மதுரையில் ஏப்.10ல் இறைச்சி விற்க தடை

image

மகாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 10) இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: தடையை மீறி விற்பனை செய்தால் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன், பொது சுகாதாரச் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

News April 8, 2025

மதுரையில் ரூ.24 கோடி மோசடி

image

பங்குசந்தையில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் கிடைக்கும் என கூறி ரூ.24 கோடி மோசடி செய்ததாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களாக மூதலீட்டிற்கான லாப தொகை வழங்கியதால் அதை நம்பி முதலீடு செய்துள்ளோம் என புகார் அளிக்க வந்தவர் தெரிவித்துள்ளவனர்.ஒவ்வொருவரும் தலா ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை முதலீடு செய்து இழந்துள்ளனர்.

News April 8, 2025

மதுரை அங்கன்வாடியில் வேலை ரெடி

image

மதுரை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 217 பணியாளர், 4 குறு அங்கன்வாடி பணியாளர், 152 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.

error: Content is protected !!