News March 19, 2024
மதுரை: சித்திரை திருவிழா முக்கிய அறிவிப்பு

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளதாக மதுரை கள்ளழகர் கோவில் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகாலை 5:51 மணி முதல் 6:10 மணிக்குள்ளாக தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள உள்ளதாகவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 6, 2025
பிரதமரை முதல்வர் அவமதித்து விட்டார் – அண்ணாமலை

மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். அதில், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்காதது வருத்தம். இதில் அரசியல் செய்வது தவறு. முதலமைச்சருக்கு வெயில் தாங்காது என்று ஊட்டிக்கு சென்று விட்டார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். தனது கடமையை செய்ய தவறிவிட்டார். பிரதமரை அவமதித்த முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
News April 6, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச அடையாள அட்டை வழங்கும் முகாம்

மதுரை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அதன்படி கீழ்காணும் மண்டல வாரியாக முகாம்கள் நடைபெறுகின்றன. அதில் கலந்து கொண்டு பயன்பெற மதுரை மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அதன்படி கள்ளிக்குடி ,செல்லம்பட்டி ,T கல்லுப்பட்டி, ஏழுமலை ,உசிலம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.
News April 6, 2025
மதுரை அருகே மாடி வீடே இல்லாத வினோத கிராமம்

மதுரையில் இந்த காலத்திலும் மாடி வீடே இல்லாத அதிசய கிராமம் ஒன்றுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் சேடப்பட்டி அருகே பொன்னையன்பட்டி கிராமத்தில் சுமார் 120 வீடுகள் உள்ளது. ஊர் எல்லையில் காவல் தெய்வமாக திகழும் கருப்பசாமிக்கு கட்டுப்பட்டு கோவிலின் உயரத்தை மீறி கட்டிடம் அமைத்தால் துன்பம் வந்து சேருமோ என்ற அச்சத்தில் பல தலைமுறையாக மாடி வீடே காட்டாமல் உள்ளனர். இது பற்றி தெரியாத நண்பருக்கு SHARE பண்ணுங்க.