News April 6, 2025
மதுரை அருகே மாடி வீடே இல்லாத வினோத கிராமம்

மதுரையில் இந்த காலத்திலும் மாடி வீடே இல்லாத அதிசய கிராமம் ஒன்றுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் சேடப்பட்டி அருகே பொன்னையன்பட்டி கிராமத்தில் சுமார் 120 வீடுகள் உள்ளது. ஊர் எல்லையில் காவல் தெய்வமாக திகழும் கருப்பசாமிக்கு கட்டுப்பட்டு கோவிலின் உயரத்தை மீறி கட்டிடம் அமைத்தால் துன்பம் வந்து சேருமோ என்ற அச்சத்தில் பல தலைமுறையாக மாடி வீடே காட்டாமல் உள்ளனர். இது பற்றி தெரியாத நண்பருக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News April 11, 2025
ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை

மதுரை மேலூர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் இவரது மனைவி அபிராமி 25. இவர் இரண்டாவது பிரசவத்திற்காக தாய் வீடான கொட்டக்குடிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அபிராமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் 108 ஆம்புலன்ஸ் அழைத்து மருத்துவமனைக்குசென்ற போது, செல்லும் வழியிலே பிரசவ வலி அதிகமானதால் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் அபிராமிக்கு பிரசவம் பார்த்துள்ளார்.பிரசவத்தில் ஆம்புலன்சிலே ஆண் குழந்தை பிறந்துள்ளது.
News April 10, 2025
மதுரை புறநகர் பகுதி இரவு ரோந்து காவலர் எண் வெளியீடு

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி,மேலூர், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஏப்.10) இரவு 10 மணி முதல் அதிகாலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 10, 2025
வண்டியூர் மாரியம்மன் கோயிலின் ஐதீகம்

மதுரையின் காவல் தெய்வமாக வண்டியூர் மாரியம்மன் விளங்குகிறார். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த விஷேஷ நிகழ்ச்சி நடத்தினாலும், மாரியம்மனிடம் உத்தரவு கேட்ட பிறகே நடத்துவதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள தெப்பம் மதுரை வட்டாரத்திலேயே மிகப்பெரியது எனும் பெயரை பெற்றுள்ளது. தீராத வியாதி, குடும்ப பிரச்னை, தொழில் பிரச்னை, திருமணத் தடை நீங்க இங்கு வழிபட்டால் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம். Share.