News March 16, 2025
மதியம் அடிதடி.. இரவில் கொலை 2/2

ராஜா கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொலையாளிகளை அடையாளம் கண்டறிந்தனர். அவர்கள், வாண்டு மணி, வெள்ளை ராகுல், விக்னேஷ் ஆகும். மணியின் கூட்டாளியான விஜய் என்பவரிடம் சம்பவத்தன்று மதியம் ராஜா தகராறில் ஈடுபட்டு விஜய்யை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணி, தனது கூட்டாளிகள் 2 பேருடன் அன்று மாலையே ராஜாவை கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
Similar News
News March 17, 2025
தீ பிடித்து எரிந்த மின்சார பைக்; மூவர் படுகாயம்

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த நடராஜன் தனது மின்சார பைக்கை சார்ஜ் போட்டுவிட்டு மாடிக்கு சென்று படுத்துள்ளார்.கீழ்தளத்தில் அவரின் மகன் கெளதம்,மருமகள் மஞ்சு, 9 மாத குழந்தை மூவரும் உறங்கி உள்ளனர். அதிகாலை 5 மணிக்கு சார்ஜில் இருந்த மின்சார பைக் திடீரென தீ பிடித்து எரிந்து கீழ்தளம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இதில் படுகாயம் அடைந்த மூவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News March 17, 2025
இரட்டை கொலை; இரத்த குளமாக மாறிய கோட்டூர்புரம்

சென்னை, கோட்டூர்புரத்தில் அருண் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என தகவல் வெளியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News March 16, 2025
சென்னையில் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்

சென்னையில் பார்க்கவேண்டிய 10 முக்கிய இடங்கள்: 1.மெரினா கடற்கரை, 2.அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, 3.வள்ளுவர்கோட்டம், 4.ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயில், 5.எலியட்ஸ் கடற்கரை, 6.விஜிபி கோல்டன் பீச், 7.செயின்ட் தாமஸ் கதீட்ரல் பசிலிக்கா, 8.ஆயிரம் விளக்கு மசூதி, 9.கபாலீஸ்வரர் கோவில், 10.வடபழனி முருகன் கோவில். ஷேர் பண்ணுங்க.