News April 4, 2025
மக்களுக்கு மாவட்ட காவல் துறை அறிவுறுத்தல்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் பொது மக்கள் தங்களின் மொபைல் போன்களுக்கு முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் எனவும் அவ்வாறு வரும் அழைப்புகள் உங்களிடம் மோசடி செய்யும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி உள்ளது.#cybercrime #1930
Similar News
News April 17, 2025
திருமண தடை நீங்க முக்கியமான கோயில்

திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியில் அமைந்துள்ளது 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கநாதேஸ்வரர் கோயில். அங்கம் பிளவு பட்டு இருப்பதால் அவர்களை அங்க நாதேஸ்வரர் என்ற பெயர் சொல்லி அழைக்கின்றனர்.இந்த கோயிலில் அம்மன் சுபத்ரா ஜனனி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்,இதனால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம்நடைபெறும் சிறப்பும் உள்ளது. திருமண தடையுள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 17, 2025
வேலை தேடும் திருப்பத்தூர் இளைஞர்கள் கவனத்திற்கு

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க.
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

திருப்பத்தூர் மாவட்டத்தில் 306 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த<