News April 8, 2025
பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஏப்ரல் 12ம் தேதி காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல் நீக்கல், செல்போன் எண் இணைத்தல் உள்ளிட்டவற்றுக்கு மனு கொடுத்து தீர்வு பெறலாம்.
Similar News
News April 26, 2025
ராணிப்பேட்டையில் குழந்தை வரம் தரும் சிவன் கோயில்

ராணிப்பேட்டை ஓச்சேரியில் சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பொதுவாக காமாட்சி அம்மனை நாம் அமர்ந்த கோலத்தில் தரிசித்து இருப்போம், ஆனால் இந்த கோயிலில் தாமரை மலரில் நின்று காட்சி தருகிறார் . குழந்தை வரனுக்காக காத்திருப்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வேண்டினாள் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை செல்வத்துக்காக காத்திருப்பவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
News April 26, 2025
பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT)
News April 26, 2025
ராகு கேது தோஷம் நீக்கும் காசி விஸ்வநாதர் கோயில்

ராணிப்பேட்டை வாலாஜா காசி விஸ்வநாதர் கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.