News March 4, 2025
பைக் நேருக்கு நேர் மோதல் ஒருவர் உயிரிழப்பு

சேலம், பெரிய வனவாசியை சேர்ந்த மணிவேல் என்பவர் அமரகுந்தியில் உள்ள தனது தங்கையை காண இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மல்லிக்குந்தம் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியதில் மணிவேல் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News March 4, 2025
சேலம் பிப்ரவரி 4 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் பிப்ரவரி 4 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 11 மணி தமிழ்நாடு உடல் உழைப்பு ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️ மாலை 5 மணி தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் ▶️மாலை ஆறு மணி கோட்டை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் ▶️இரவு ஏழு மணி கோட்டை ஓம் சக்தி விநாயகர் கோவில் திருவிழாவில் பால்குட ஊர்வலம்.
News March 4, 2025
IOB வங்கியில் வேலை டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) 750 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்னப்பிக்கலாம். மார்ச்.09க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊக்கத்தொகை: ரூ. 15,000 ரூபாயாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே <
News March 4, 2025
பிளஸ் 2 பொதுத்தேர்வு- சேலத்தில் 280 பேர் ஆப்சென்ட்

சேலம் மாவட்டத்தில் 151 தேர்வு மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழ் பாடத் தேர்வை 37,095 மாணவ, மாணவிகள் எழுதினர். 280 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தெரிவித்துள்ளார். இதனிடையே, 300 பறக்கும் படை அலுவலர்கள், 3,100 அறை கண்காணிப்பாளர்கள், 3,500-க்கும் மேற்பட்ட தேர்வு பணியாளர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட்டனர்.