News March 15, 2025
பேருந்துகளில் இலவச பயணம்- சிஎஸ்கே அதிரடிஅறிவிப்பு

சென்னை சேப்பாக்கத்தில் 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் சென்னை போக்குவரத்து மாநகர பேருந்துகளில் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என்று சிஎஸ்கே அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 17, 2025
குடிநீர் கட்டணம் செலுத்த புதிய முறை அறிவிப்பு

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் தற்போது குடிநீர் கட்டணம் செலுத்தும் புதிய முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login வலைதளத்தில் டெபிட் கார்ட் கிரெடிட் கார்ட், நெட் பேங்கிங் மற்றும் UPI மூலமாக பணம் செலுத்தலாம். இந்த அரையாண்டிற்கான உங்கள் வரி மற்றும் கட்டணத்தை செலுத்த கடைசி நாள் 31-03-2025 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News March 17, 2025
சென்னையில் இன்று பெட்ரோல், மற்றும் டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சர்வதேச நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இன்று (மார்ச்.17) 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.92.39 வருகிறது.
News March 17, 2025
மின்சார பைக் தீ பிடித்து எரிந்த விபத்தில் கைக்குழந்தை உயிரிழப்பு

மதுரவாயலில் மின்சார பைக்கிற்கு சார்ஜ் போட்ட போது தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.விடிய விடிய பைக்கிற்கு சார்ஜ் போடும் போது தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த 9 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.