News January 24, 2025
பேருந்து நிலையத்தில் போலீஸ் வருவாய் துறை குவிப்பு

நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்கிற தமிழரசன் கடந்த 16ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி உயிரோடு தீ வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் யாதவர் சங்கத்தினர் இன்று நெமிலி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News August 5, 2025
ராணிப்பேட்டையில் நாளையே கடைசி!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் முதல் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <
News August 5, 2025
ராணிப்பேட்டை: நாளையே கடைசி நாள்!

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மொத்தம் 41 கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை முறையே அரக்கோணம்- 6, ஆற்காடு-7, கலவை-12, நெமிலி-5, சோளிங்கர்-3, வாலாஜா-10 ஆகும். இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கான நேர்காணல் செப்டம்பர் 16 முதல் 22 வரை நடைபெற உள்ளது. அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
News August 5, 2025
மருமகனை வெட்டிய மாமனார் கைது

நெமிலி அடுத்த நெல்வாய் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். கருத்து வேறுபாட்டால் பிரிந்து மாமனார் வீட்டில் வசிக்கும் மனைவியிடம் மது போதையில் தகராறு செய்தார். இதை அடுத்து ஆகஸ்ட் 3ம் தேதி நள்ளிரவு மாமனார் தட்சிணாமூர்த்தி உட்பட ஐந்து பேர் புருஷோத்தமனின் வீட்டுக்குச் சென்று கத்தியால் அவரை வெட்டினார்கள். நெமிலி போலீசார் வழக்குப் பதிந்து ஐந்து பேரையும் கைது செய்தனர்.