News March 4, 2025
பெருங்கலூர் யூகலிப்டஸ் காட்டிற்குள் வாலிபர் தூக்கு மாட்டி இறப்பு

புதுகை, ஆலங்குடி வட்டம் மாங்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புதுகை பெருங்களூர் யூகலிப்டஸ் மரக்காட்டிற்குள் தூக்கு மாட்டி இறந்துள்ளார். இதனையடுத்து காவல்துறைக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததின் அடிப்படையில் ஆலங்குடி காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். மேலும் அவரது பெயர், இறப்பிற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 20, 2025
அன்னவாசல் அருகே 4 சக்கர வாகனம் தீ பிடித்து எரிந்து நாசம்

அன்னவாசல் அருகே உள்ள கீழசித்தகுடிபட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் (30) என்பவருக்கு சொந்தமான 4 சக்கர வாகனத்தை நேற்று இரவு வீட்டின் அருகில் இருக்கும் செட்டில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் 4 சக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 19, 2025
கொடும்பாளூர்: அகழாய்வில் கிடைத்த பழமையான பொருட்கள்

புதுக்கோட்டை கொடும்பாளூரில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் 100க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க அணிகலன்கள், 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள், பாசி மணிகள், நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கருங்கல் சுவர் உள்ளிட்டவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
News April 19, 2025
புதுக்கோட்டை: கோடைச்சுற்றுலா குடும்பத்தோடு கிளம்புங்க!

புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் கி.பி 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்தன்னவாசல் அமைந்துள்ளது,இங்குள்ள சமனர் குகைகளில் ஒவியங்கள்,அகழ்வராச்சிகளின்படி புதைக்கப்பட்ட பானைகளும்,மனித எலும்புகூடுகளும் உள்ளது,மலையழகும்,பூங்காக்களும்,சிற்பக்கலை,
ஒவியக்கலைகள் இந்த சித்தன்னவாசல் சுற்றுலாதலத்தில் உள்ளது,உள்ளுரில் கோடை சுற்றுலா செல்லும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க