News March 27, 2024

பெரம்பலூர்: தேர்தல் விதிமீறல் புகார்களுக்கு..!

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்புவோர் 1800-425-9188 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04328-299166 மற்றும் 299255 என்ற எண்களிலும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் நேற்று(மார்ச் 26) தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News May 8, 2025

பெரம்பலூர்: வனத்துறையில் வேலை!

image

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள்<> www.tnpsc.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!

News May 8, 2025

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வேலூர், அரும்பாவூர், அசூர், நக்கசேலம் ஆகிய கிராமங்களில் வருகிற மே.10ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வளங்கள் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

இனி APPல அரசு அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம்

image

பெரம்பலூர் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக் செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்கலாம். செல்போனில் TN CM HELPLINE என்ற APP-யை பதிவிறக்கம் செய்து புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் பகுதியினருக்கும் Share செய்து பயனடையுங்கள்.

error: Content is protected !!