News May 14, 2024

பெரம்பலூர் : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 5ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 91.16% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 87.59சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.54 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டம் 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

Similar News

News November 20, 2024

விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

ஆதிதிராவிடர் நலத்துறையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் பெயரில் பட்டியல் இன முன்னேற்றத்திற்கு தொண்டாற்றி வருபவர்களுக்கு, டாக்டர் அம்பேத்கர் விருது ஜனவரி 2025 இல் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. எனவே பட்டியல் இனத்தவருக்கு அரிய தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் போன்ற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 20, 2024

ரேஷன் கடை வேலைவாய்ப்பு: நேர்முகத் தேர்வு அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 31 விற்பனையாளர் பணிகளுக்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத்தேர்வு நவம்பர் 25ஆம் தேதி துவங்கி, நவம்பர் 29 வரை பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மேலும் நேர்முகத் தேர்விற்கான அனுமதிச்சீட்டினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்யவும்

News November 19, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TAMCO) மூலமாக வழங்கப்பட்டு வரும் பல்வேறு கடன் மற்றும் கல்வி கடன் திட்டங்களுக்கு ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் தகுதி உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நவம்பர் 19-ஆம் தேதியான இன்று தகவல் தெரிவித்துள்ளார்.