News November 16, 2024
பெரம்பலூர்: 29 கிலோ குட்கா பொருள் சிக்கியது
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலப்புலியூர் கிராமத்தில் சுப்பிரமணியன் மகன் சக்திவேல் என்பவர் தனக்கு சொந்தமான மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 29 கிலோ கொண்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்பனை செய்த நிலையில் தனிப்படையினர் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார், ரமேஷ் மற்றும் அவரது குழுவினர் அதிரடியாக சோதனை செய்து அவற்றை பறிமுதல் செய்து சக்திவேல் என்பவரை கைது செய்தனர்.
Similar News
News November 19, 2024
உதவித் தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT,IIM,IIIT,NIT மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த இன (BC,MBC,DNC) மாணவ, மாணவிகள் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான உதவித் தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார்.
News November 19, 2024
பெரம்பலூர் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று உரிய சான்றிதழ்களுடன் 29.11.2024 க்குள் மாவட்ட ஆட்சியரகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து பயனடைய வேண்டுமென கலெக்டர் நேற்று தகவல் அளித்தார்.
News November 19, 2024
பெரம்பலூரில் 306 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நேற்று (18.11.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில் 306 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.