News April 18, 2024
பெண்ணை மானபங்க படுத்திய 4 பேர் கைது

கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரபீலா பேகம்(35). இவர் சையது பானு என்பவரிடம் ரூ 20,000 கடன் வாங்கியுள்ளார். வட்டியுடன் அசலை கொடுத்த பிறகும் மேலும் பணம் கேட்டு சையது பானு நேற்று தகராறு செய்து, ரபீலா பேகத்தின் சேலையை நடு ரோட்டில் இழுத்து மானபங்கம் படுத்தியுள்ளார். இதுகுறித்த புகாரில் கொட்டாம்பட்டி போலீசார் சையது பானு, ஆயிஷா பீவி யாஸ்மின் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டத்தில் 190 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
News April 20, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (19.04.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 19, 2025
கடத்தப்பட்ட தொழிலதிபர் நாக்பூரில் மீட்பு?

மதுரை பீபிகுளத்தை சேர்ந்த கருமுத்து சுந்தரராமன் (56) என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனது நிலத்தை ஆக்கிரமித்து, அதை வீட்டு மனைகளாக மாற்றி சிலர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 அன்று கடத்தப்பட்டார். இந்நிலையில், அவர் நாக்பூரில் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.