News March 30, 2025
பெண்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் வினோத கிராமம்

மதுரையை டி.கல்லுப்பட்டி அருகே கூவலப்புரம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 500 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பெண்கள் மாதவிலக்கு காலங்களில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் அவலம் இன்றளவும் தொடர்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு அறையில் பெண்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். பெண்கள் பல்வேறு தடைகளை தாண்டி தடம் பதிக்கும் நவீன உலகில் தொடரும் இந்த நடைமுறை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
Similar News
News April 3, 2025
மதுரை மாவட்ட புறநகர் பகுதி இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி,மேலூர், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 2, 2025
‘கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப் போராட்டம் தேவை’

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டியளித்துள்ளார். அதில், கச்சத்தீவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் சட்டப் போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு மீனவர்களின் உயிர், உடைமை பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது என்றார்.
News April 2, 2025
மதுரை: ஒரே மேடையில் சாலமன் பாப்பையா மற்றும் சசிகுமார்

மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-வது மாநாடு நடைபெற்று வருகிறது. முதல் நாள் கலை நிகழ்வில் ஆசிரியர் சாலமன் பாப்பையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். சிறப்பு விருந்தினராக இயக்குனரும் நடிகருமான சசிகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக காலையில் கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.