News April 13, 2025
பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
Similar News
News April 16, 2025
சென்னையில் அரசு வேலை; 12th பாஸ் போதும்

சென்னையில், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் காலியாக உள்ள 36 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th, டிப்ளமோ முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.19,500 – ரூ .71,900 சம்பளம் வழங்கப்படும். குறிப்பாக இந்த பணிக்கு எந்த வயது வரம்பும் கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் <
News April 16, 2025
நடக்காத விதிமீறல்; வாகனங்களுக்கு அபராதம்

சென்னையில் சாலை விதிகளை முறையாக பின்பற்றி வாகனம் ஓட்டுவோருக்கும், விதிமீறலில் ஈடுபட்டதாக மொபைல் போன் எண்ணிற்கு அபராத ரசீது வருவது, ஓட்டுநர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமீபத்தில், இத்தகைய மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும், இத்தகைய குளறுபடி இருந்தால், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். SHARE IT.
News April 16, 2025
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்

கடந்த 2018 மார்ச் 5ம் தேதி தாம்பரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி விளையாடி கொண்டிருக்கும் போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் முருகனுக்கு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார். மேலும், சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.