News December 6, 2024
பெண்களின் படிப்புக்கு தடை; ரஷீத்கான் கண்டனம்

ஆப்கனில் பெண்கள் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படிப்பதற்கும் தலிபான் அரசு தடை விதித்துள்ளதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷீத்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X பதிவில், “கல்வி தொடர்பான இஸ்லாமிய போதனைகள் பெண்கள் அறிவைப் பெறுவதையே வலியுறுத்துகிறது. பெண்களுக்கான கல்வி & மருத்துவ நிறுவனங்கள் மூடப்பட்ட ஆழ்ந்த வருத்தமும், மிகுந்த ஏமாற்றமும் அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
Similar News
News April 30, 2025
தலை இல்லாத பிரதமர்.. காங். சர்ச்சை பதிவு

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் PM மோடி பங்கேற்காததை விமர்சித்து, அவரது தலை இல்லாத புகைப்படத்தை காங். சமூக வலைதளங்களில் பகிர்ந்தது. இது கடும் சர்ச்சைக்குள்ளான நிலையில், பாக். பாசத்தை காங். காட்டுவதாக பாஜக விமர்சித்திருந்தது. அதேபோல், இது மக்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என உட்கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் எழுந்ததால், அப்பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
News April 30, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 30 – சித்திரை- 20 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 11:30 AM ▶ திதி: த்ரிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை.
News April 30, 2025
ரெட்ரோ கதை இதுதான்.. வெளியான டுவிஸ்ட்

வன்முறைகளைக் கைவிடுவதாக சபதம் ஏற்ற ஒரு கேங்ஸ்டர், தனது குடும்பத்தைப் பாதுகாக்க சபதத்தை மீறி வன்முறையைக் கையிலெடுக்கிறார், இந்த தமிழ் படம் ரத்தக்களரி மிகுந்தது என ரெட்ரோ படம் குறித்து பிரிட்டிஷ் திரைப்பட வாரியம் UK ரிலீஸையொட்டி தெரிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் மே 1-ல் உலகெங்கும் வெளியாகவுள்ளது.