News August 14, 2024
பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரத்தில் பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜன.24 ஆம் தேதி மாநில அரசின் விருதுடன் ரூ.1 லட்சம் வழங்கப்படும். இந்த விருதுக்கு நவ.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 7, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

காஞ்சிபுரத்தில் இன்று (ஆக.7) மாங்காடு நகராட்சி, காஞ்சிபுரம் வட்டாரம், வாலாஜாபாத், குன்றத்துர் ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த லிங்கை<
News August 7, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (06.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
விநாயகர் சிலைகளை கரைக்க வழிமுறைகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதீர்த்த குளம் மற்றும் பொன்னேரிக்கரை ஆகிய இடங்களில் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுளள்ளார்.