News April 8, 2024

பூட்டிய வீட்டில் ஆண் பிணம் போலீஸ் விசாரணை

image

திருமங்கலம் கக்கன் காலனி ஓடை அருகே ஒரு பூட்டிய வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் திருமங்கலம் டவுன் போலீசாருக்கு நேற்று தகவல் கொடுத்தனர். போலீசார் வீட்டின் கதையை உடைத்து பார்த்தபோது வாலிபர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கடந்தது. விசாரணையில் அவர் சுந்தர்(38) கடந்த 8 ஆண்டுகளுக்காக மனைவியை பிரிந்து வாழ்கிறார் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News

News April 19, 2025

மதுரை: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

image

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*

News April 19, 2025

மதுரை வந்தடைந்த கவிஞர் வைரமுத்து

image

மதுரையில் நடைபெறும் நிகழ்விற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த கவிஞர் வைரமுத்துவிற்கு மதுரையைச் சேர்ந்த வைரமுத்து ரசிகர் மன்றத்தினர் சால்வை அணிவித்து வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து வைரமுத்துவிற்கு புத்தகங்கள் பரிசாக வழங்கினர். மதுரையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்ட பிறகு சென்னைக்கு நாளை புறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 19, 2025

போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி

image

மதுரை, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் போலீஸ் எஸ்-ஐ தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 23ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. விரும்புவோர் ஆதார் அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அனுகவும். தங்களது சுய விவரங்கள் பதிவேற்றம் செய்து பாடக்குறிப்புகளை இந்த <>லிங்கில் <<>> எடுக்கலாம். விவரங்களுக்கு 9698-36868 அழைக்கலாம். போலீசாக விரும்புவோருக்கு SHARE செய்து உதவவும்.

error: Content is protected !!