News April 5, 2025
புலி போல சாதித்த எலி!

கம்போடியாவில் ஒரு எலி உலக சாதனை படைத்திருக்கிறதாம். அதுவும் நிலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்து கொடுத்து மனிதர்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறதாம். ஆப்ரிக்கன் எலியான அதன் பெயர் ரோனின். கம்போடியா ராணுவத்தில் கடந்த 2021 முதல் பணியாற்றி வருகிறது. தற்போது வரை 109 கண்ணிவெடிகளை மோப்பம் பிடித்து அகற்ற உதவி இருக்கிறது ரோனின். சாதிக்க பிறந்த எலி!
Similar News
News April 7, 2025
எந்த மதத்தையும் பாஜக விட்டு வைக்க போவதில்லை: உத்தவ்

வக்ஃப் திருத்த மசோதாவை அமல்படுத்திய பிறகு, பாஜக தற்போது கிறிஸ்தவர்கள், சமணர்கள், பவுத்தர்கள் மற்றும் இந்து கோவில்களின் நிலங்கள் மீதும் கண் வைத்துள்ளதாக மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். எந்த சமூகத்தின் மீதும் பாஜகவுக்கு அக்கறை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். பாஜகவின் அத்துமீறல்களை அனைவரும் கண்களை திறந்து பார்க்க வேண்டும் எனவும் உத்தவ் வலியுறுத்தியுள்ளார்.
News April 7, 2025
புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசியில் இன்று விடுமுறை

புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசி மாவட்டங்களில் இன்று(ஏப்.7) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம், திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் குடமுழுக்கையொட்டி இவ்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாற்றமின்றி நடைபெறும். SHARE IT
News April 7, 2025
வெற்றிப்பாதைக்கு திரும்புமா RCB?

பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் இன்று RCB – MI மோதுகின்றன. முதல் 2 போட்டிகளில் வெற்றிப்பெற்று வீரநடை போட்ட RCB கடைசி போட்டியில் குஜராத்திடம் வீழ்ந்தது. சொந்த மண்ணில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு பெங்களூரு திரும்புமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அதேவேளையில் MI அணி விளையாடிய 4 போட்டிகளில் 3ல் தோல்வியை தழுவியது. அதனால் MI நிச்சயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.