News January 8, 2025
புதுவையில் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை
புதுச்சேரியில் உள்ள மணவெளி சட்டமன்ற தொகுதியில் ரூ. 64.38 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான செல்வம் அவர்கள் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
Similar News
News January 9, 2025
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமாக விசைப்படையில் 10 மீனவர்கள் இன்று அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 10 மீனவர்கள் மற்றும் படகை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் மீனவர்கள் மற்றும் படகை விடுதலை செய்ய மத்திய வெளியுவுத்துறை அமைச்சருக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
News January 9, 2025
எச்.எம்.பி.வி., நோய் பற்றி மக்கள் பீதி அடைய வேண்டாம்
புதுச்சேரி சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் எச்.எம்.பி.வி., நோய் பற்றி பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். இது நீண்டகாலமாகவே உள்ளது புதுச்சேரியில் பாதிப்பு இல்லை. சுவாச நோய் தொடர்பாக நோயாளிகள் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு ஏதும் இல்லை. புதுச்சேரியில் தற்போது ஆய்வக பரிசோதனை வசதி மற்றும் சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
News January 9, 2025
‘திராவிட ஒழிப்பும், பெரியார் எதிர்ப்பும்’ எனது கொள்கை – சீமான்
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக அவர் இன்று புதுச்சேரி கீர்த்தி மகாலில்விளக்கம் அளித்தார். தமிழ் ஒரு காட்டுமிராண்டித்தனமான மொழி மொழி’ நீங்கள் எழுதியது, பேசியது எந்த மொழியில்? இஸ்லாமியர் வேறு நாட்டவர் என்று பேசியிருக்கிறார் பெரியார்.திராவிடத்தை ஒழிப்பதும், பெரியாரை எதிர்ப்பதும் தான் எனது என்றார்