News August 25, 2024

புதுவையில் ஆணழகன் போட்டி

image

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் 55 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருபுவனை உடற்பயிற்சியாளர் சிவனேசன் ஏற்பாட்டில் சவுத் இந்தியன் அளவில் ஆணழகன் போட்டி கடற்கரை சாலையில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.

Similar News

News August 5, 2025

புதுவை: ரயில்வேயில் 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

image

புதுவை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள டிக்கெட் எழுத்தர், ரயில் கிளார்க், டிக்கெட் மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட 30,000க்கும் மேலான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படவுள்ளது. +2 மற்றும் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆக.30 முதல் செப். 29_க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகும். ரயில்வே துறையில் பணியில் சேர காத்திருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பை SHARE பண்ணுங்க!

News August 5, 2025

புதுவை: 10% இட ஒதுக்கீட்டிற்கு அரசாணை வெளியீடு

image

புதுச்சேரியில் உயர்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கான கோப்பு தயார் செய்து, லண்டன் சென்றிருந்த கவர்னருக்கு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. கோப்பை ஆய்வு செய்த கவர்னர் கைலாஷ்நாதன், ஒப்புதல் வழங்கி, கடந்த வாரம் தலைமைச் செயலருக்கு அனுப்பினார். அதனைத் தொடர்ந்து நேற்று (ஆக.04) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2025

மானிய விலையில் நெல் விதை விற்பனை!

image

காரைக்கால் வேளாண்துறை மூலம் பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ், நெல் விதை CR1009, IR 20, BPT 5204, KKLR- 2, DRR DHAN 58 ஆகிய ரகங்கள் பொது பிரிவு விவசாயிகளுக்கு ஒரு கிலோ விதை ரூ10/- க்கும் அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் கணேசன் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

error: Content is protected !!