News April 20, 2025
புதுவை: வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு

வில்லியனூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுந்தரராஜன். இவர், குடிப்பழக்கம் உள்ள நிலையில், வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்ததாகவும், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நேற்று காலை அதே பகுதி வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் சடலத்தை மீட்டு, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2025
இந்தியா ராணுவத்தில் இணைய ஒரு வாய்ப்பு

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிறப்ப உள்ளன. இதற்கு பதிவு செய்வதற்காக, காரைக்காலைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 21.04.2025 அன்று அறிஞர் அண்ணா அரசு கல்லூரியிலும், புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 22.04.2025 அன்று தாகூர் கலைக் கல்லூரியிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
News April 19, 2025
புதுவை: கோடை விடுமுறைக்கு ஏற்ற இடம்

புதுவையில் ஊசுட்டேரி கிராமத்தில் பழங்குடி இன தாவரங்கள் விலங்குகள் என இயற்கையின் பாரம்பரியத்துடன் இருப்பதுதான் ஊசுட்டேரி சதுப்புநிலம். இங்கு பசுமையான சூழலில் வியக்கும் அழகோடு இந்த ஏரியில் படகு சவாரி செய்தும். இயற்கையின் அழகியலை புகைப்படங்களாக பதிவு செய்யவும் இந்த கோடை விடுமுறையில் மக்கள் வருகின்றனர். 390 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி நம்மை நிச்சயம் இயற்கையின் அழகில் திகைக்க வைக்கும். SHARE IT.
News April 19, 2025
புதுச்சேரியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள தனியார் ஹோட்டல்களுக்கு ஈ மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டு சோதனை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணை நிலை ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.