News January 10, 2025

புதுவை: இறைச்சி கடைகளை மூட உத்தரவு

image

புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகிற 15ஆம் தேதி புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கால் நடை அறுவை நிலையங்கள் மற்றும் ஆடு, மாடு, பன்றி, கோழி இறைச்சி, மீன் விற்பனை கடைகள் மூடியிருக்க வேண்டும். உத்தரவை மீறி செயல்படும் இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 10, 2025

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

image

புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் வழங்கினார். அப்போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் உடன் இருந்தனர்.

News January 10, 2025

47,442 பெண்களுக்கு 50% சலுகை

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரியில் பெண்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் முத்திரைத்தாள் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை வழங்கும் திட்டத்தின்கீழ் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் சுமார் 47,442 பெண்கள் பயன்பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

முதுநிலை படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

image

புதுவை பல்கலைக்கழகத்தில் 2025–26 ம் கல்வியாண்டு முதுநிலை பட்டம், பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கியூட் (பி.ஜி) நுழைவு தேர்வுக்கு https://exams.nta.ac.in/CUET–PG/ என்னும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் https://www.pondiuni.edu.in/admissions-2025—-26/ என்னும் பல்கலைக்கழக வலைத்தளத்தில் உள்ள தகவல் கையேட்டில் டவுண்லோடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது