News April 7, 2025
புதுவை: ஆன்லைனில் ரூ.49,000 இழந்த நபர்

புதுச்சேரி, சின்னக்கடையை சேர்ந்தவர் வசந்த ராஜன். இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பி வசந்தராஜன் ரூ.49,000 முதலீடு செய்து ஏமாந்ததுள்ளார். பின் அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதுபோன்ற போலி அழைப்புகளை பொதுமக்கள் நம்பவேண்டாமென காவல்துறை எச்சரித்துள்ளனர்.
Similar News
News April 18, 2025
புதுச்சேரி: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் <
News April 18, 2025
பிஎம் கிஷன் யோஜனா, சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “புதுவையில் வாட்ஸ்ஆப் குழுக்களில் தற்போது பிரதான் மந்திரி கிஷன் நியூ யோஜனா போன்ற பெயா்களில் கடன் தருவதாகக் கூறி குறுஞ்செய்தி மற்றும் போலியான செயலிகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவை, இணையவழி மோசடியாளா்கள் உருவாக்கப்பட்ட போலி செயலிகளாகும். ஆகவே, அவற்றை யாரும் நம்ப வேண்டாம், என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிறருக்கு ஷேர் செய்யவும்..
News April 18, 2025
புதுச்சேரி: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

புதுச்சேரி பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:
▶️மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி-1070
▶️பிராந்திய ஆணையர் மற்றும் துணை ஆட்சியர் வடக்கு-1077
▶️அவசர ஊர்தி (Ambulance)-102, 108
▶️தீயணைப்பு-101
▶️காவல் கட்டுப்பாட்டு அறை-100
▶️குழந்தைகள் பாதுகாப்பு-1098
▶️பெண்கள் உதவி-1091
▶️சாலை விபத்துகள்-1073
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.