News March 22, 2025
புதுவை அருகே மூதாட்டி கொலை வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

புதுச்சேரி, மூலக்குளம், வில்லியனுார் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சாந்தா அவரது வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் நகை மாயமாகி இருந்தது.போலீசார் எழிலரசனை கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், குற்றம் சாட்டப்பட்ட எழிலரசனுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
Similar News
News March 23, 2025
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு சிபிஐ சீல்

புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் காரைக்காலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு இன்று சிபிஐ சீல் வைத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
News March 23, 2025
அதிசயங்கள் மிகுந்த ஆயிரங்காளியம்மன் ஆலயம்!

ஆயிரங்காளியம்மன் கோயில் காரைக்கால் அடுத்த திரு.பட்டினத்தில் உள்ளது. இந்த அம்மன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளிப்பார். பேழையில் இருந்து கொலுசு சத்தம் கேட்ட பின்பே பேழை திறக்கப்படும். பேழையின் உள்ளே மாலைகள் வாடாமல் புதிதாகவே இருக்குமாம். இங்கு அம்மனுக்கு எதை படைத்தாலும் ஆயிரம் எண்ணிக்கையில் தான் படைப்பார்கள். எனவே தான் ஆயிரங்காளி எனப் பெயர் வந்தது. அம்மன் அருள்பெற SHARE செய்யவும்
News March 23, 2025
நெருங்கும் கோடை காலம், சுகாதாரத்துறை எச்சரிக்கை

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கோடை காலத்தில் பரவக்கூடிய தோல், கண், செரிமான மண்டல தொந்தரவுகள், அம்மை நோய், இருமல் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரக்கூடிய ‘ஹீட் ஸ்ட்ரோக்’ போன்ற நோய்கள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளன. வெப்ப பக்கவாதத்தின் போது ஐஸ் கட்டிகள், தண்ணீர் உதவியோடு உடலை குளிர்வித்து சிகிச்சை அளிக்கவும். தேவை இன்றி வெளியே செல்வதை தவிர்க்கவும்