News May 7, 2025
புதுவை: அட்சய திருதியை, இங்கு சென்று வழிபடுங்கள்

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியைக்கு தங்க நகைகள், மஞ்சள் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே புதுவை மக்களே உங்கள் வீட்டின் அருகே உள்ள மகாலெட்சுமி, பெருமாள் மற்றும் குபேரர் கோயிலுக்கு சென்று வழிபட்டு தங்கம், மஞ்சள் மற்றும் கல்உப்பு போன்ற மங்கள பொருட்களை வாங்குங்கள். தங்கம் மட்டுமில்லை இதையும் வாங்கலாம். SHARE பண்ணுங்க..
Similar News
News August 9, 2025
புதுச்சேரியில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம்

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 9) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை புகார் மூலம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News August 8, 2025
புதுவை: மாணவர்களுக்கு பருவ நிலா கருத்தரங்கம்

புதுவைத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கழகமும் மயூரி சித்திர நாட்டியாலயாவும் இணைந்து நடத்திய பருவ நிலாக் கருத்தரங்கம் அரியாங்குப்பம் முத்தமிழ்க் கலை இல்லத்தில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் முனைவர் இராச.குழந்தைவேலனார் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தேசிய விருதாளர் மண்ணாங்கட்டி மொழி வாழ்த்து வழங்கினார். இதில் தமிழ்மாமணி முனைவர் வேல்முருகன் வரவேற்புரை வழங்கினார்.
News August 8, 2025
புதுவை: எக்ஸ்போ பொருட்காட்சி திறந்து வைப்பு

புதுச்சேரி உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் நடைபெறும் தினமலர் எக்ஸ்போ பொருட்காட்சியினை இன்று (ஆகஸ்ட் 8) வெள்ளிக்கிழமை காலை முதலமைச்சர் என் ரங்கசாமி சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் பொதுப்பணித்துறை அமைச்சர் க லட்சுமிநாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொருட்காட்சியினை திறந்து வைத்தனர்.