News November 11, 2024

புதுச்சேரியில் 44 மாணவர்கள் மீது வழக்கு பதிவு

image

புதுச்சேரி மருத்துவ படிப்பில் என்.ஆர்.ஐ. இட ஒதுக்கீட்டில் சேர போலி ஆவணங்களை சமர்ப்பித்த 44 மாணவர்கள் குறித்து சென்டர் கன்வீனர் ஷெரின் ஆன் சிவன் கொடுத்த புகாரின் அடிப்படையில்புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசார் விசாரணை செய்தனர். புகாரை உறுதிப்படுத்தி 44 மாணவர்கள் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News November 19, 2024

மாணவியின் புகைப்படம் வைரல் – வழக்கு

image

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வரும் 22 வயது மாணவி ஒருவர் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் துறையில் படித்து வருகிறார். வரலாறு படிக்கும் மாணவரான சூர்ய நாராயணன் மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, பிற மாணவர்களுக்கும் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளார். இந்நிலையில்,  மாணவியின் புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News November 19, 2024

சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் திடீர் போராட்டம்

image

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 300-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்க சிறை நிர்வாகம் மறுத்து வருவதாக கூறப்படுகிறது இதை எதிர்த்து ஆயுள் தண்டனை கைதிகள் நேற்று சமையல் வேலை செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இது சிறைக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில் விசாரணை கைதிகள் மூலம் சமையல் செய்து மற்ற கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்டது

News November 19, 2024

முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் திருட்டு

image

புதுவை வில்லியனூர் ஆரியபாளையம் மேரி பொனாண்டஸ், முன்னாள் ராணுவ வீரா். இவர் பெங்களூரில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றாா். அவரது உறவினர் வீட்டை கண்காணித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்பக்கக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம், மூன்றரை பவுன் தங்க நகைகள் திருடுபோனது. இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.