News May 13, 2024
புதுச்சேரி: மழைக்கு வாய்ப்பு

புதுச்சேரியில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
Similar News
News April 21, 2025
புதுச்சேரி மின்சாரத் துறையில் வேலை வாய்ப்பு

புதுச்சேரி மின்சாரத் துறை கட்டுமான உதவியாளர் பணி நிரப்பப்பட உள்ளது. அதன்படி, இதற்கு 25 ஏப்ரல் 2025 பிற்பகல் 3 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், விருப்பமுடைய 18 முதல் 25 வயது வரை உள்ள தகுதிவாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ <
News April 21, 2025
புதுச்சேரி: அக்னி வீர் பணிக்கு சிறப்பு முகாம்

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில் நுட்பப்பணி, எழுத்தர், பண்டக காப்பாளர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிறப்பபட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், புதுச்சேரி சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் 22.04.25 அன்று தாகூர் கலைக் கல்லூரியில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
News April 21, 2025
பூசாரி கொலை – கொத்தனார் கைது!

புதுச்சேரி, தவளகுப்பத்தில் கோயில் பூசாரி சுந்தர் என்பவர் மீது தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்ததாக, கொத்தனாரான தமிழரசனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக தமிழரசன் வாக்குமூலம் அளித்துள்ளார் என கூறப்படுகிறது. அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து, வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.