News January 24, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி இணையவழி சீனியர் எஸ்பி நாரா சைத்தானியா நேற்று  கோரிமேட்டில் செய்தியாளர்களிடம் உடனடி கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து கடன் வாங்க வேண்டாம் என்றும், கடன் வாங்கிய அனைத்து நபர்களுமே அவர்களுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி, அந்த புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டி, பல மடங்கு அதிகமாக பணத்தை பறித்துள்ளனர், ஆகவே உடனடி கடன் செயலில் கடன் வாங்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News January 24, 2025

1,664 அரசு ஆசிரியர்களுக்கு கைக்கணினி – புதுச்சேரி முதல்வர்

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி கல்வித் துறை மூலம் பள்ளிகளில் வகுப்பறைகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் சுமார் 1,664 அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு கைக்கணினி (TABLET) வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்

News January 24, 2025

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநா் கைது

image

புதுவை சேதராப்பட் 13 வயது சிறுமி, சில நாள் முன்பு பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பின் வீடு திரும்பினாா். அவரிடம் பெற்றோா் விசாரித்தில் வேலூா் மாவட்டம், சின்னமோட்டூர் காா்த்தியுடன் வாட்ஸ் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இந்நிலையில், சிறுமியை ஏழுமலை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. பின்னர், சேதராப்பட்டு போலீசார் ஏழுமலையை போக்சோவில் கைது செய்தனா்.

News January 24, 2025

பாகூரில் 26 இல் கிராம சபா கூட்டம் – ஆணையர் அழைப்பு

image

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் 26ம் தேதி, பாகூர் கொம்யூனுக்கு உட்பட்ட 14 கிராம பஞ்சாயத்துக்களில், 5 கட்டங்களாக கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குடியிருப்புபாளையம், காட்டுக்குப்பம், குருவிநத்தம், மணமேடு, மூர்த்திக்குப்பம், பனித்திட்டு பரிக்கல்பட்டு, ஆகிய இடங்களில் நடைபெறும்