News March 30, 2025
புதுக்கோட்டை: மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்
Similar News
News April 5, 2025
பயன்படுத்திய பழைய நான்கு சக்கர வாகனம் ஏலம்

புதுக்கோட்டையில், உதவிஇயக்குநர் பயன்படுத்திய பழைய நான்கு சக்கர வாகனம் வரும் 15 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநர் (ஊராட்சி) அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 11, 12 ஆகிய இரு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி இயக்குநர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தினை பார்வையிடலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 5, 2025
புதுக்கோட்டையில் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்நுகர்வோர் சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அதில் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர்கள் அலுவலகங்களிம் சிறப்பு முகாம் நடைபெறும். (SHARE பண்ணுங்க)
News April 5, 2025
மழையூர் டாஸ்மார்க் அருகே வாலிபர் வெட்டிக் கொலை

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் டாஸ்மாக் அருகே முருகேஷ் (20) என்ற வாலிபர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மழையூரில் அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அரிவாள் வெட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து மழையூர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.