News April 9, 2024
புதுகை: வாக்குச்சாவடி அலுவலா்கள் அஞ்சல் வாக்களிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலின்போது வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலா்கள் ஆகிய பணிகளில் பங்கேற்கும் அரசு ஆசிரியா்கள் தங்களின் அஞ்சல் வாக்குகளை ஞாயிற்றுக்கிழமை செலுத்தினா். அலுவலா்களுக்கான முதல் கட்ட தேர்தல் பணிப் பயிற்சி ராணியார் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
Similar News
News April 17, 2025
புதுக்கோட்டை போஸ்ட் ஆபிசில் வேலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் முடித்த விருப்பமுள்ளோர் ஏப்.28-ஏப்.30 வரை புதுகை தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 04322-221220, 80722-66355 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)
News April 17, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் உட்பட 3 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் வேலைகளை அதற்கேற்றாற் போல் தகவமைத்து கொள்ளவும், மழை நேரங்களில் குழந்தைகளை கவனத்துடன் கையாளவும் அறிவுறுத்தப்படுகிறது. மழை நேர மின்தடை புகார்களுக்கு 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News April 17, 2025
ரூ. 8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

நாகையை சேர்ந்த அலெக்ஸ் என்பவர் மீது, ஏற்கெனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகையில் இருந்து புதுக்கோட்டை வந்த அலெக்ஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதைப்பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.8 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது.