News August 8, 2024
புதுகை கவிஞருக்கு வைரமுத்து புகழாரம்

புதுக்கோட்டை, குளத்தூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முரசொலியில் தொடர்ந்து கவிதைகளை எழுதி வரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிச்சுடர் கவிதை பித்தனுக்கு, கவிஞர் வைரமுத்து புகழாரம். சென்னையில் நேற்று நடைபெற்ற கலைஞரின் நூறு கவிதைகள் நூறு நூல் வெளியிட்டு விழாவில் நம்மிடம் ஒரே ஒரு கவிஞர் மட்டுமே மிச்சம் இருக்கிறார், அவரை கொண்டாட வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறினார்.
Similar News
News August 5, 2025
புதுக்கோட்டைக்கென தனி காசு?

வரலாற்றில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்காக தனி நாணயம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தொண்டைமான் மன்னர்கள் கொண்டு வந்த இந்த நாணயம் அம்மன் காசு என்று அழைக்கப்பட்டது. சுமார் 1.2 கிராம் எடை கொண்ட இந்த செப்புக் காசுகளின் ஒரு புறத்தில் தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவமும், அதன் பின்புறம் வேறு மொழியில் “விஜய” என்றும் பொறிக்கப்பட்டிருக்கும். நமது பெருமையை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 5, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று தெரிவித்துள்ளது.
News August 4, 2025
புதுக்கோட்டை: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

புதுக்கோட்டையில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள் <