News April 3, 2024
புகையிலை கடத்திய வாலிபர் மீது வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் அடுத்த வஞ்சரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முகமதியர்பேட்டை கிராம பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் வாகனத்தை சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News April 14, 2025
கள்ளக்குறிச்சி: குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். பயிற்சி மற்றும் தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 16ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 14, 2025
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் வட்டாரம், ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், சுய உதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருப்பதுடன், சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்று இருக்க வேண்டும். தகுதிவாய்ந்த கூட்டமைப்புகள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
News April 14, 2025
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி முடித்தவர்கள் வரை, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவங்களை, வேலைவாய்ப்பு அடையாள அட்டையை காண்பித்து, கள்ளக்குறிச்சி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க