News January 30, 2025
புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டிய நபர் கைது

புதுச்சேரியில் மாடலிங் செய்கின்ற இளம் பெண்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து புகைப்படங்களை எடுத்து, மார்பிங் செய்து இன்ஸ்டாகிராம் fack ID ஐடி மூலமாக அதே பெண்களுக்கு அனுப்பி மிரட்டிய சென்னை தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரியும் பட்டதாரி வாலிபர் ரூபசந்திரன் என்பவரை புதுச்சேரி இணையவழி போலீசார் இன்று கைது செய்தனர்.
Similar News
News February 22, 2025
விவசாயிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய புதுச்சேரி போக்சோ கோர்ட்டு

விழுப்புரம் மாவட்டம் கயத்தார் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன்(31) கடந்த 27.06.2019 அன்று திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக வழக்குப்பதிந்து புதுச்சேரி போக்சோ கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜானகிராமனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், பெற்றோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
News February 21, 2025
புதுச்சேரியில் புதிய மேம்பாலம் அமைக்க ஒப்புதல்

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் சம்பந்தமாக மத்திய அமைச்சர் அவர்கள் புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு எழுதிய கடிதம் எழுதி கோரிக்கை வைத்தார் அந்நிலையில் மத்திய அரசு மேம்பாலம் கட்டுவதற்கும் மற்றும் பாண்டியிலிருந்து கடலூர் வரை உள்ள 20கிமீ ரோட்டை அகலப்படுத்தவதற்கும் சேர்ந்து 1000 கோடி ரூபாய் செலவில் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
News February 21, 2025
பிரபல யூ-டியூபர் கார்த்திக் பிள்ளை கைது

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பம் தானாம்பாளையம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சமூக வலைதளங்களில் தவறான தகவல் வெளியிட்டதாக, பிரபல யூ-டியூபர் கார்த்திக் பிள்ளை என்பவரை புதுச்சேரி போலீசார் இன்று அதிகாலை சென்னையில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.