News April 5, 2025
பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் மாற்று பாதையில் இயக்கம்

நெல்லையிலிருந்து பிலாஸ்பூருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் கோயம்புத்தூர் திருப்பூர் வழியாக பிலாஸ்பூர் செல்கிறது. சேலம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 13, 20-ம் தேதிகளில் நெல்லையிலிருந்து அதிகாலை புறப்படும் இந்த ரயில் போத்தனூர், இருகூர் வழியாக செல்கிறது. கோயம்புத்தூர் நிறுத்தம் கிடையாது. அதற்கு பதிலாக போத்தனூர் நிறுத்தம் உண்டு என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News April 6, 2025
19 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட தம்பதி

மானூர் மேலபிள்ளையார் குளத்தைச் சேர்ந்த காளிதாஸ் கருப்பசாமி மாரியப்பன் ஆகியோரிடம் மதுரையைச் சேர்ந்த பிரேம்குமார் அவரது மனைவி காளிஸ்வரி இருவரும் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4,05,000 பணத்தை மோசடியில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து தேடப்பட்டு வந்த பிரேம்குமார் தம்பதியை கோவையில் இன்று போலீசார் கைது செய்தனர்.
News April 5, 2025
நெல்லை: கொலை வழக்கில் 8 பேர் விடுதலை

மேலப்பாளையத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு சொத்து பிரச்சனை தொடர்பாக காதர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு முதலாவது கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் நீதிபதி பத்மநாதன் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
News April 5, 2025
நெல்லையில் தாது மணல் ஆலைகளில் சிபிஐ திடீர் சோதனை

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கீரைக்காரன்தட்டு கிராமத்தில் உள்ள விவி மினரல்ஸ் தாது மணல் ஆலைகள் மற்றும் அதன் தலைமை அலுவலகம் மற்றும் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகத்தில் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, ஐகோர்ட் உத்தரவுப்படி 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.