News March 21, 2025
பிரபல ரவுடி சுட்டிபிடிக்கப்பட்டார்

சென்னையில் பிரபல ரவுடி சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைகோர்ட் மகாராஜா என்ற ரவுடி மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் கிண்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்யும்போது, அவர் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் அவரை சுட்டுப்பிடித்தனர்.
Similar News
News March 31, 2025
வழக்கறிஞர் வெட்டிக் கொலை

சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற வழக்கறிஞர் நேற்று (மார்.30) வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. கொலைக்கான காரணம்? என்பது குறித்தும் கொலை செய்த மர்ம கும்பல் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
News March 30, 2025
டிப்ளமோ முடித்தால் போதும் மத்திய அரசு வேலை!

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 391 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் போதும். இதற்கு 18- 30 வயதுடையவர்கள் ஏப்ரல்- 1ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.39,015 முதல் ரூ.68,697 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News March 30, 2025
SC, ST இளைஞர்களுக்கு பொறியாளர் புத்தாக்க பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், 2022, 2023, 2024ஆம் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு பொறியியல் படிப்பில் இளநிலை படிப்பு முடித்த 21 முதல் 25 வயது வரை உள்ள எஸ்.சி, எஸ்.டி இளைஞர்களுக்கு பொறியாளர் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. தகுதியுடையவர்கள் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.