News March 4, 2025
பியூட்டி பார்லரில் விபச்சாரம் – புரோக்கர் கைது

கோவை சேரன் மாநகர் அடுத்த பாலாஜி நகரில் உள்ள ஒரு காம்பளக்ஸில் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்ததை உறுதி செய்தனர். இதனையடுத்து அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த 43 வயது பெண் புரோக்கரை கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர்.
Similar News
News April 21, 2025
கோவை மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்!

▶️கோவை (தெ) வட்டாட்சியர் 0422-2214225. ▶️கோவை (வ) வட்டாட்சியர் 0422-2247831. ▶️மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் 0425-4222153. ▶️சூலூர் வட்டாட்சியர் 0422-2681000. ▶️அன்னூர் வட்டாட்சியர் 0425-4299908. ▶️பேரூர் வட்டாட்சியர் 0422-2606030. ▶️மதுக்கரை வட்டாட்சியர் 0422-2622338. ▶️கி.கடவு வட்டாட்சியர் 04259-241000. ▶️ஆனைமலை 0425-3296100. ▶️பொள்ளாச்சி 04259-226625. ▶️வால்பாறை 0425-3222305. SHARE பண்ணுங்க.
News April 21, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு

தவெக பூத் கமிட்டி மாநாடு, வரும் 26,27 ஆகிய தேதிகளில், கோவை சரவணம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு, மேற்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் பேசவுள்ளார். இதில் 2026 சட்டமன்ற தேர்தல் களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு விளக்கவுரை ஆற்றவுள்ளார்.
News April 21, 2025
கோவை: சம்ஹாரீஸ்வர பைரவர் கோயில்

கோவை, ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதூரில், கால சம்ஹாரீஸ்வர பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. 8 வாகனங்களில் 8 வகையான கால பைரவர்கள், சம்ஹார பைரவர்களாக இங்கு வீற்றிருக்கின்றனர். சக்திவாய்ந்த கால பைரவரை அஷ்டமி நாளான இன்று, 11 தீபங்கள் ஏற்றி, வணங்கினால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.