News March 28, 2025
பாவங்கள் போக்கும் சக்திவாய்ந்த ஆதனூர் கோயில்

ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில், சுவாமிமலையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம். இந்த கோயிலில், கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் பெருமாளின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் உள்ளன. இவை மோட்ச தூண்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த தூண்களை தொட்டு தரிசனம் செய்தால், பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். மோட்சம் கிட்ட இந்த கோயிலுக்கு போங்க. இதை SHARE பண்ணுங்க.
Similar News
News April 8, 2025
பொதுமக்களிடம் இருந்து 620 புகார் மனுக்கள் பெறப்பட்டன

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டை, பட்டா, கல்விக் கடன், முதியோர் உதவித்தொகை என 620 புகார் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News April 7, 2025
பணக் கஷ்டத்தை நீக்கும் தஞ்சை குபேரபுரீஸ்வரர் கோயில்

தஞ்சை வெண்ணாற்றின் தெற்கு கரையோரம் அமைந்துள்ளது இந்த தஞ்சபுரீஸ்வரர் கோயில். குபேரன் தன் செல்வங்களை இழந்து இங்குள்ள சிவனை வழிபட்டதில் அவருக்கு அனைத்து செல்வங்களும் மீண்டும் கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள இறைவன் குபேரபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தீபாவளி திருநாளிலும், பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் இங்கு வழிபட்டால் செல்வம் பெருகும் என கூறப்படுகிறது. இதை SHARE செய்யவும்
News April 7, 2025
அங்கன்வாடி வேலைவாய்ப்பு, ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 124 அங்கன்வாடி பணியாளர்கள், 29 குறுஅங்கன்வாடி பணியாளர், 145 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதி உடையவர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் www.icdstn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.