News April 2, 2025
பால் உற்பத்தியை அதிகரிக்க தென்காசியில் ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சங்கங்களின் முன்னேற்றத்தை மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது நமது மாவட்டத்தில் செயல்படும் 73 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பால் நாளொன்றுக்கு சராசரியாக 12,000 லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 4, 2025
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு நடத்தலாம்

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்த நிலையில், இன்று நடந்த மறுவிசாரணையில் தமிழக அரசின் வாதத்தை ஏற்று, தடை நீக்கப்பட்டு குடமுழக்கு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில் புணராமைப்புக்கான நிதி முறையாக பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் ,கணபதி ஹோமம் முடிந்த நிலையில் குடமுழுக்கு நிறுத்துவது ஏற்கத்தக்கல்ல என தமிழக அரசு விளக்கம்.
News April 4, 2025
கும்பாபிஷேதிற்கு தடை – மீண்டும் விசாரணை

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான மனுக்கள் இன்று (ஏப்ரல் 4) மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு 70-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடக்குமா? நடக்காதா? என பக்தர்கள் மத்தியில் பெரும் ஏக்கத்தை உண்டாக்கியுள்ளது.
News April 4, 2025
தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

இன்று (ஏப்ரல்4) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட என 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.(ஏப்.4) முதல் ஏப்.9-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.