News September 26, 2024

பாம்பனில் தடையை மீறி கடக்கும் படகுகள்!

image

பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டும் பணி தொடங்கி தற்போது பாலம் பணிகள் முடிந்த நிலையில் நடுவில் துாக்கு பாலத்தை பொருத்தும் இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. இந்நேரத்தில் பாலத்தை கடக்கும் மீனவர்கள் மீது கனரக இரும்பு பொருட்கள் தவறி விழுந்தால் ஆபத்து ஏற்படும் என்பதால் மீனவர்கள் பாலத்தை கடந்து செல்ல ரயில்வே நிர்வாகம் தடை விதித்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளது. இதையும் மீறி சில படகுகள் கடந்து சென்ற வண்ணம் உள்ளன.

Similar News

News November 20, 2024

ராமநாதபுரத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பு

image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் நாளை காலை 9 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் ராமநாதபுரத்தில் அதிகனமழைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

பரமக்குடி பாலியல் வன்கொடுமை வழக்கு ஒத்திவைப்பு

image

பரமக்குடியில் 9 ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நகர்மன்ற உறுப்பினர் சிகாமணி
உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிகாமணி சிறையில் உள்ளார். இந்நிலையில் 5 பேரும் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் நவ.27 ல் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

News November 20, 2024

தேசிய குழந்தைகள் கலை நிகழ்ச்சி 

image

டில்லியில் தேசிய குழந்தைகள் தின கலை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை மத்திய கல்வி இயக்குனர் முக்தா அகர்வால் துவக்கி வைத்தார். தமிழக அரசு, மதுரை கலை பண்பாட்டு மையம் ராமநாதபுரம்  ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் சிலம்பம் ஆசிரியர் லோக ஆகாஷ் தலைமையில் 4 மாணவர்கள் பங்கேற்றனர். பிரகுல் ரிங்பால் கிஷோர் இரட்டைகம்பு, ஹரி பிரித்திவிராஜ் ஒற்றைக்கம்பு, புகழ்மதி சுருள்வாழ் ஆட்டம் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தனர்.