News March 21, 2025

 பாஜக பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து காவல் நிலையம் முற்றுகை

image

பாஜகவை சேர்ந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவ கோகுல கிருஷ்ணனை நேற்று அடையாளம் தெரியாத ஐந்து பேர் சேர்ந்த கும்பல் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பாஜக வை சேர்ந்த பலர் மீஞ்சூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

Similar News

News March 22, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 22, 2025

திருவள்ளூரில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூரில் இன்று (மார்.22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அம்பத்தூர், ஆவடி, திருமழிசை போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் குடை அல்லது ரெயின்கோர்டை எடுத்துச் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?

News March 22, 2025

உதவி ஆய்வாளர் மெர்சி உடலுக்கு, மாவட்ட எஸ்.பி. மரியாதை

image

லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மெர்சி உயிரிழந்த சம்பவம் போலீஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது இறப்புக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திருவள்ளுர் மாவட்ட எஸ்.பி. நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட போலீசார் பலரும் கலந்துக்கொண்டனர்.

error: Content is protected !!