News March 24, 2025

பள்ளியில் பாட்டு பாடிய சரித்திர குற்றவாளி

image

ஆம்பூர் அருகே கன்றாம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர குற்றவாளி கணேஷ் பங்கேற்று குத்து பாடல் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசுப் பள்ளி விழாவில் அவர் எப்படிக் கலந்து கொண்டார்? யார் அனுமதி அளித்தனர்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 17, 2025

திருமண தடை நீங்க முக்கியமான கோயில்

image

திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியில் அமைந்துள்ளது 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கநாதேஸ்வரர் கோயில். அங்கம் பிளவு பட்டு இருப்பதால் அவர்களை அங்க நாதேஸ்வரர் என்ற பெயர் சொல்லி அழைக்கின்றனர்.இந்த கோயிலில் அம்மன் சுபத்ரா ஜனனி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்,இதனால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம்நடைபெறும் சிறப்பும் உள்ளது. திருமண தடையுள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

வேலை தேடும் திருப்பத்தூர் இளைஞர்கள் கவனத்திற்கு

image

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க.

News April 17, 2025

அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் 306 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த<> லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, வரும் 23ஆம் தேதிக்குள் தங்களது வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கணவனை இழந்த அல்லது ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25-35 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!