News April 9, 2025

பள்ளி அருகே புகையிலைப் பொருள் விற்ற பெண் கைது

image

புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோலை நகர் மெயின் ரோட்டில் உள்ள சின்னாத்தா அரசு பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற காயத்ரி என்பவரை முத்தியால்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.1000 மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News April 19, 2025

புதுச்சேரி: நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்!

image

புதுவை மக்களே உங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை, செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள், கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். ரிப்போர்ட்டராக பதிவு செய்ய <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அல்லது 95429-22022 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் பண்ணவும். இதனை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.

News April 19, 2025

புதுச்சேரி: தனியார் வங்கியின் லிங்க் மூலம் மோசடி

image

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது வாட்ஸ் ஆப்பில் தனியார் வங்கியின் லிங்க் ஒன்று வந்துள்ளது. வெங்கடேசன் அந்த லிங்கை கிளிக் செய்து வங்கி விவரங்களை பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.23 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. இதுகுறித்து நேற்று சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 18, 2025

புதுச்சேரி: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

image

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் <>rrbchennai.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!