News March 14, 2025

பரமக்குடி வக்கீல் படுகொலையில் மேலும் ஒருவர் சரண்

image

பரமக்குடி, விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரகுமார்(35). மார்ச்.5 இரவு பரமக்குடியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் பேபிகரன், தீனதயாளன், அப்துல் கலாம் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இச்சம்பவத்தில் கள்ளிக்கோட்டை நிதிஷ்(26), பரமக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன்பு சரணடைந்தார். பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News April 19, 2025

சிறுமிகளுக்கு சர்ச் பாதிரியார் பாலியல் தொந்தரவு

image

மண்டபம், கோயில்வாடி புனித அருளானந்தர் சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்தவர் ஜான் ராபர்ட் (46). இவர் 2022ம் ஆண்டு வழிபாட்டிற்கு வந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். குழந்தைகள் நலக்குழுவின் புகாரில் போக்சோ வழக்கில் ஜான்ராபர்ட்டை கைது செய்தனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம் ஜான்ராபர்ட்டுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.9000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

News April 18, 2025

இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு மேலே உள்ள படத்தில் உள்ள தொலைபேசி எண்களை அழைக்கலாம்.

News April 18, 2025

“இராம்நாட்” விமானம்‌ பற்றி தெரியுமா?

image

ராஜ ராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதியின் ஆட்சியின்போது இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் அவர் ராமநாதபுரம் சீமை இளைஞர்களை ராணுவத்தில் சேருமாறு அறிவுறுத்தியதோடு பல லட்சம் ரூபாய் மதிப்பில் அரசுக்கு “இராம்நாட்” என்ற பெயரில் ஒரு விமானத்தை கொடையாக கொடுத்துள்ளார்.மேலும் இராஜ ராஜேஸ்வர சேதுபதி,போர்க்கால நிதியுதவிக்காக பல லட்சங்களை வழங்கியது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

error: Content is protected !!