News April 5, 2025
பயன்படுத்திய பழைய நான்கு சக்கர வாகனம் ஏலம்

புதுக்கோட்டையில், உதவிஇயக்குநர் பயன்படுத்திய பழைய நான்கு சக்கர வாகனம் வரும் 15 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநர் (ஊராட்சி) அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 11, 12 ஆகிய இரு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி இயக்குநர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தினை பார்வையிடலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2025
புதுக்கோட்டையில் இன்று உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம் புகழ்பெற்ற நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா இன்று (ஏப்.07) நடைபெற உள்ளது. இதனால் புதுக்கோட்டை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிய உள்ளனர். இதனை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என கலெக்டர் மு. அருணா அறிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
News April 6, 2025
குழந்தை பாக்கியம் அருளும் நார்த்தமலை முத்துமாரியம்மன்

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலையில் இந்த முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நாரதர் இந்த மலையில் வந்து தங்கியதால் இதற்கு நாரதர்மலை என அழைக்கப்பட்டு பின்னர் நார்த்தமலை என்றானது. இங்குள்ள முத்துமாரியம்மனை வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் மற்றும் அக்னி கரகம் எடுத்து வழிபட்டால் தீரா நோயும் தீரும் என்பது ஐதீகம்.
News April 6, 2025
குவாரி குத்தகை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரண கற்கள், மண், கிராவல், பலவண்ண கிரானைட் கற்கள் மற்றும் இதர கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் பெற வரும் 7ஆம் தேதி (நாளை) முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திருமதி அருணா அவர்கள் தெரிவித்துள்ளார். இதை விண்ணப்பதாரர்கள் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இணையத்தள முகவரி மூலம் விண்ணப்பம் செய்யலாம்.