News August 15, 2024
‘பயத்தை விதைக்கும் நேரம் வந்துவிட்டது’

சுதந்திர தின உரையில் கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலையை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், நாடே கோபத்தில் கொந்தளித்து கொண்டிருப்பதை அறிவேன். உங்களின் கோபத்தை என்னால் உணர முடிகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு பயத்தை விதைக்கும் நேரம் இது. பெண்களை சீண்டினால் தூக்கில் தொங்க வேண்டும் என கயவர்களுக்கு தெரிய வேண்டும் என காட்டமாக கூறினார்.
Similar News
News August 5, 2025
ஆக.21ல் தவெக மாநில மாநாடு

மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு ஆக.21-ம் தேதி நடைபெறும் என்று விஜய் அறிவித்துள்ளார். 25-ம் தேதி மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஆக.27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்கூட்டியே மாநாட்டை நடத்த வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியது. இதனையடுத்து. ஆக.25-ம் தேதிக்கு பதில் 21-ம் தேதி 2-வது தவெக மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 5, 2025
இது இப்போ ‘பான் வேர்ல்ட்’ பிரச்னை!

ரயில்வே ஸ்டேஷன், பார்க் என எங்கு பார்த்தாலும் ‘பான் கறை’ நம்மூரில் மட்டும்தான் என நினைத்துவிட வேண்டாம். லண்டன் நகரமும் இந்த பான் கறையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. இந்த கறையால் வெறுத்துப்போன ஆங்கிலேயர்கள் முதலில் தங்கள் ஏரியாவில் புதியதாக திறக்கப்பட்ட பான் கடையை மூடும் படி கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கறை குறித்த வீடியோ, போட்டோக்கள் வெளிவர இவற்றுக்கு யார் காரணம் எனக் கேள்வி எழுந்துள்ளது.
News August 5, 2025
கூட்டணி கட்சியினர் PM மோடிக்கு பாராட்டு

தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக்குழு கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்காக PM மோடிக்கு கூட்டணி கட்சி MP-க்கள் பாராட்டு தெரிவித்தனர். அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக துணிவுடன் போராடிய முப்படைக்கும் கூட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கூட்டத்தில் அடுத்த துணை ஜனாதிபதி யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.