News March 24, 2024

பந்தலூர்: வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ

image

பந்தலூர் அருகே கோட்டப்பாடி பகுதிகளில் வனப்பகுதி உள்ளது. தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் செடி கொடிகளும் காய்ந்த நிலையில் உள்ளன. திடீரென சேரம்பாடி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வனகாப்பாளர் கோபு மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Similar News

News April 18, 2025

நீலகிரி: பைக் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு 

image

நீலகிரி மாவட்டம் உதகை – குன்னூர் நெடுஞ்சாலையில் பாய்ஸ் கம்பெனி பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், சேரம்பாடி பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்னொருவர் குன்னூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து அருவங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 18, 2025

நீலகிரி: முக்கிய காவல்துறை எண்கள்

image

▶️நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் 0423-2223839.▶️கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் 0423-2223840. ▶️உதகை நகர துணை காவல் கண்காணிப்பாளர் 0423-2223811.▶️ உதகை கிராம துணை காவல் கண்காணிப்பாளர் 0423-2223829.▶️ குன்னூர் துணை காவல் கண்காணிப்பாளர் 04232-221834. ▶️கூடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் 04262-261227. ▶️தேவாலா துணை காவல் கண்காணிப்பாளர் 04262-260324. இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News April 18, 2025

நீலகிரி: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இந்த <>லிங்க் <<>>மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *

error: Content is protected !!